ஈபிடிபி றீகன் பதவி விலகுகின்றாரா? விலக்கப்படுகின்றாரா?
யாழ் மாநகரசபையின் பிரதி மேயர் றீகன் எனப்படுகின்றது துரைராஜா இளங்கோ பதவி விலகுவதாக தெரியவருகின்றது. கடந்த யாழ் மாநகர சபைத் தேர்தலின்போது ஈபிடிபி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டது. 23 உறுப்பினர்களை கொண்ட இம்மன்றுக்காக ஐ.ம.சு.முன்னணி சார்பில் 9 ஈபிடிபி உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். அதேநேரம் புத்தளத்திலிருந்து மீள்குடியேறிய முஸ்லிம்களும அக்கூட்டணியில் போட்டியிட்டனர், அத்தருணத்தில் புத்தளத்திலிருந்து மீள்குடியேறிய சுமார் 4388 பேர் வாக்களிக்க தகுதியாக இருந்தும் 2325பேர் வாக்களித்திருந்தனர். இவர்களில் சுமார் 1350 பேர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களித்து 5 முஸ்லிம் பிரமுகர்களை சபைக்கு அனுப்பினர்.
இந்நிலையில் யாழ் மாநகரசபையில் ஆட்சி அமைக்க முன்னர் முஸ்லிம் தரப்பினருடன் சமரசம் செய்யவேண்டிய நிலை ஈபிடிபி க்கு ஏற்பட்டது. இரு வருடங்களின் பின்னர் பிரதி மேயர் பதவி முஸ்லிம் பிரதிநிதி ஒருவருக்கு வழங்கப்படுமென ஒப்பந்தம் செய்யப்பட்டது. அவ்வொப்பந்தத்தின் அடிப்படையில் எதிர்வரும் நாட்களில் ரமேஸ் என்படும் முஸ்லிம் நபர் பிரதிமேயராக நியமிக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. அதன் பொருட்டு றீகன் பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.
எது எவ்வாறாயினும் குறிப்பிட்ட தேர்தலில் அதிகூடிய விருப்புவாக்குகளை றீகன் எனப்படுகின்ற துரைராஜா இளங்கோ பெற்றிருந்தும் யோகேஸ்வரி பற்குணராஜா , ஈபிடிபி தலைவரின் அதிகாரத்தின் பேரில் நியமிக்கப்பட்டார். இந்நியமனத்தை தொடர்ந்து கட்சியினுள் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டிருந்ததுடன், றீகன் மேயருடன் தொடர்ந்தும் ஒத்துழையயாமையையே கடைப்பிடித்துவந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தற்போது ஈபிடிபி யையும் யாழ் மேயரையும் றீகன் வெளிப்படையாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளார். இதன் விளைவுகள் ஈபிடிபி யின் செல்வாக்கில் பாதிப்பை ஏற்படுத்துமா என ஆதரவாளர்கள் மத்தியில் கவலை வெளியிடப்படுகின்றது.
0 comments :
Post a Comment