முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கார குமாரதுங்கவை இலக்கு வைத்து கடந்த 1999ம் ஆண்டு நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் சுயவிருப்பின் பேரிலேயே பொலிஸாரிடம் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த நபர் கூறிய கருத்துக்கள் சுயவிருப்பின் பேரில் வழங்கப்பட்டதா என உறுதிசெய்ய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி வராவெவ முன்னிலையில் விவாதம் இடம்பெற்றது.
பொலிஸார் தன்னை சித்திரவதைக்கு உட்படுத்தி குற்றத்தை ஒப்புக் கொள்ள வைத்ததாக வழக்கின் பிரதான சந்தேகநபரான வேலாயுதம் வரதராஜா நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த சந்தேகநபரை விசாரணை செய்த பொலிஸ் மற்றும் அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற வைத்திய அதிகாரிகளிடம் சாட்சிங்கள் பெறப்பட்டதன் பின், சந்தேகநபர் சுயவிருப்பின் பேரிலேயே பொலிஸாரிடம் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதாக நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
No comments:
Post a Comment