கல்முனை பாண்டிருப்பு வீதியில் நேற்று அதிகாலை இடம்பெற்ற கோரக்கொலை தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கல்முனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. குறிப்பிட்ட நபர் கொலையுண்ட இளைஞனின் சகோதரியை காதலித்து வந்ததாகவும், பின்னர் காதலி சந்தேக நபரை கைவிட்டதை தொடர்ந்து பழிவாங்கும் நோக்கில் இவர் சகோதரனைப் பழிவாங்கும் இச்செயலில் இறங்கியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
இதேநேரம் விடயம் தொடர்பாக வேறு ஒரு கோணத்திலும் விசாரணைகள் இடம்பெறுவதாக அறியக்கிடைக்கின்றது. அதுவும் காதல்விவகாரம் ஒன்றுடன் தொடர்புடையது என நம்பப்படுகின்றது.
No comments:
Post a Comment