Sunday, December 18, 2011

அரசின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து திருப்தி- கரமான எதிர்பார்ப்பில் உள்ளேன். பான் கீ மூன்

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, பகிரங்கப்படுத்தப்பட்டமை தொடர்பில், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம்பேங்கிமூன பாராட்டு தெரிவித்துள்ளார். அரசின் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும், செயலாளர் நாயகம் திருப்திகரமான எதிர்பார்ப்புடன் இருப்பதாகவும், அறிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தினால் கற்ற பாடங்களை ஆய்வுக்குட்படுத்தி, தேசத்தின் எதிர்காலத்தை மீள்கட்டமைப்பதற்கான யோசனைகளை சமர்ப்பிப்பதற்கென, ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை, அரசினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனை தொடாந்து, இவ்வறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

ஆணைக்குழு அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டது தொடர்பில், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பேங்கிமூன் பாராட்டு தெரிவித்துள்ளதாக, ஐக்கிய நாடுகள் பொது செயலகம் அறிவித்துள்ளது. இவ்வறிக்கையை, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் உட்பட அமைப்புகள் ஆழமாக ஆராய்ந்து வருகின்றது.

இதனை தொடர்ந்தே, இது தொடர்பில் கருத்துகளை வெளியிட முடியுமென, ஐக்கிய நாடுகள் பொது செயலகம் தெரிவித்துள்ளது. எது எவ்வாறாயிருப்பினும், ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் இலங்கை அரசு முன்னெடுக்கும் செயற்பாடுகள் குறித்து, நன்நோக்குடன் இருப்பதாக, ஐக்கிய நாடுகள் பொது செயலகம், சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment