பயங்கரவாதிகளுக்கு உதவினார்களாம்.
கனடாவில் இயங்கும் தமிழ் மன்றம் Canadian Foundation for Tamil Refugee Rehabilitation (CAFTARR) அந்நாட்டின் தருமஸ்தாபனங்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. எல்ரிரிஈ பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் கனடிய அரசாங்கம் இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. கனடாவில் தமிழ் அமைப்பிற்கு கிடைத்த நிதி உதவிகளில் 80 வீதமானவை பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக, கனடிய அரசின் வருமான வரி திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதனையடுத்து கனடிய தமிழ் மன்றத்தை தருமஸ்தாபனங்களின் பட்டியலிலிருந்து நீக்குவதற்கு கனடிய அரசாங்கம் தீர்மானத்தது. 2005 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் எல்ரிரிஈ ஆதரவு அமைப்பான தமிழர் புனர்வாழ்வு அமைப்பிற்கு கனடிய தமிழ் மன்றம் 4 இலட்சத்து 24 ஆயிரம் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வெள்ளவத்தையில் இயங்கும் தமிழ் அமைப்பொன்றுக்கு 13 கோடி ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
No comments:
Post a Comment