மரக்கறி மற்றும் பழ வகைகளை கொண்டு செல்வதற்காக, பிளாஸ்டிக் கூடை பயன்பாடு இன்று தொடக்கம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் சட்டத்திற்கமைய, இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இலகுவில் பழுதடையக்கூடிய மரக்கறி வகைகள் மற்றும் பழ வகைகளை கொண்டு செல்லும்போது, பொதிகளை பயன்படுத்தக்கூடாது. பிளாஸ்டிக் அல்லது பலகையினால் ஆக்கப்பட்ட கூடைகளில் இவ்வாறான பொருட்களை கொண்டு செல்ல வேண்டுமென, வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு சில மரக்கறி வகைகளுக்கு, பிளாஸ்டிக் கூடை அவசியமில்லை. வட்டக்காய், கிழங்கு வகை, பலாக்காய், போன்ற மரக்கறி வகைகளுக்கும், வாழைப்பழம், அன்னாசி போன்ற பழ வகைகளுக்கும் இது அவசியமில்லை.
புதிய சட்டம் முறையாக அமுல்ப்படுத்தப்படுமென, அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment