Tuesday, December 13, 2011

யாழ் நெல்லியடி குஞ்சர்கடை பகுதில் பாரிய விபத்து.இருவர் பலி

யாழ் நோக்கி வந்து கொண்டு இருந்த நியாப்க்கு சொந்தமான பிக்கப் வாகனம் வேகப்கட்டுப்பாடை இழந்து நெல்லியடி குஞ்சர் கடைபகுதியில் பாரிய விபத்துக்குள்ளானது. குறித்த வாகனம் வேககட்டுபாட்டை இழந்து அருகிலிருந்த மின்கம்பம் மற்றும் பனைமரத்துடன் வந்த வேகத்தில் மோதியதில் பிக்கப் வாகனத்தில் பயணம் செய்த மூவரில் இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தனர் படுகாயமடைந்த மற்றைய நபர் மந்திகை வைத்திய சாலையில் அனுமதிகப்படுள்ளனர்.

சம்பவ இடத்தில் துன்னாலை வடக்கு கரவெட்டியை சேர்ந்த வாகனசாரதியான கணேசமூர்த்தி பார்த்தீபன் வயது 23 என்பரும் ,யாழ் பல்கலைக்கழக உடல்கல்வி விஞ்ஞான அலகு இரண்டாம் வருட மாணவனான செல்வநாயகம் கோபிநாத் வயது 23 ஆகியோரே சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர் குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.









No comments:

Post a Comment