மிலிந்த மொறகொட ஜீ.எல். பீரிஸ் அமெரிக்க ஆதரவாளர்கள்:- விக்கிலீக்ஸ் தகவல்
தற்போதைய வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸூம், முன்னாள் பொருளாதார மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொரகொடவும் அமெரிக்க ஆதரவாளர்கள் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுரக அதிகாரிகளினால் அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க பிரதமராக கடமையாற்றிய காலத்தில் அமெரிக்காவுடன் நெருங்கிய உறவுகளைப் பேண வேண்டுமென்பதில் மிலிந்தவும், ஜீ.எல்.பீரிஸூம் கூடுதல் நாட்டம் காட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2003ம் ஆண்டு மே மாதம் 23ம் திகதி அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கான அப்போதைய அமெரிக்கத் தூதுவர் ஆஷ்லி வில்ஸினால் இந்தத் தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய போன்ற காலாணித்துவ நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகடுளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேண வேண்டுமென ஜீ.எல்.பீரிஸ் விரும்பிய அதேவேளை, அமெரிக்காவுடன் உறவுகளைப் பேண வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அதிகளவில் அமெரிக்க விஜயங்களை மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடனும் இந்தியாவுடனும் நேரடி உறவுகளைப் பேண வேண்டும் என்பதில் மிலிந்த மொரகொட கூடுதல் ஆர்வம் காட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் டி.சி.யில் பிறந்து அமெரிக்க பெண்ணை திருமணம் செய்து கொண்ட மிலிந்த மொரகொடவிற்கு, அமெரிக்காவுடனான பந்தம் அதிகமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு வழிகளில் அமெரிக்காவிற்கும் மிலிந்த மொரகொடவிற்கும் உறவு காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பதவிகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட சில காலங்களிலேயே அமெரிக்காவுடன் உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதில் பீரிஸூம், மொரகொடவும் அதிக அக்கறை காட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment