புலம்பெயர் தமிழரிடம் புலிக்கொடியை நிராகரியுங்கள் எனவும் அதை தூக்குவதால் எந்த பயனுமில்லை என்றும் பலமுறை நான் அவர்களுக்கு அறிவுறுத்தியிருக்கின்றேன், ஆனால் அவர்கள் என் கதையை காதில் வாங்குவதாக இல்லை என இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்.
அமெரிக்க பிரதிநிதிகள் குழுவை கிளிநொச்சியில் சந்தித்த சிறீதரன் புலம்பெயர் மக்களின் நிலைப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடியிருக்கின்றார். அவ்வேளை புலம்பெயர் தளத்தில் மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்களின் போது புலிக்கொடியை வைத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்பில் என்ன நினைக்கின்றீர்கள்? என்று அமெரிக்கப் பிரதிநிதிகள் கேட்டபோது, அந்த நடவடிக்கை தவறானது என்றும் புலிக்கொடியினை ஏந்திச் செல்லும் நடவடிக்கையினை புலத்தில் உள்ளவர்கள் கைவிடவேண்டும் அதனை ஏந்திச் செல்வதாலேயே புலம்பெயர் மக்களின் போராட்டங்கள் வெற்றியடையவில்லை என்றும் சிறீதரன் தெரிவித்திருக்கின்றார்.
தன்னை தீவிர புலி ஆதரவாளராக புலம்பெயர் தமிழர் மத்தியில் காட்டிக்கொள்ளும் சிறிதரன் புலிகளை நிராகரித்துள்ள மேற்கு நாடுகளுடன் அவர்களுக்கு ஏற்றவாறு செயற்பட்டுவருகின்றார் எனவும் இவரது செயற்பாடுகள் ஏனைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சவாலாக அமைவதாகவும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
Tigers will never go out of real tamils mind but if not holding the flag will help us to reach our goal, why not we adopt that policy.
ReplyDelete