இலங்கை - பாக்கிஸ்தான் ஏற்றுமதி தொடர்புகளை விரிவாக்க விசேட திட்டங்கள்
இலங்கை - பாக்கிஸ்தான் ஏற்றுமதி தொடர்புகளை விரிவாக்க விசேட திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஏற்றுமதி தொடர்புகளை பரவலாக்கி பொருளாதார தொடர்புகளை அபிவிருத்தி செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இதன் பொருட்டு பல்வேறு செயல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
கொழும்பில் இந்த ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்றது.
கடந்த வருடங்களில் பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச வர்த்தக கண்காட்சியிலும் இலங்கை பங்கேற்றது. இதன் போது இலங்கையின் உற்பத்திகளுக்கு புதிய சந்தை வாய்ப்புக்களை உருவாக்க முடிந்தது. இந்த திட்டத்தை அமுல்ப்படுத்துவதன் மூலம் ஏற்றுமதி சந்தை மேலும் அபிவிருத்தி அடையுமென சபையின் தலைவர் ரத்னாயக்க தெரிவித்தார்.
0 comments :
Post a Comment