கைதி இரணைமடுக்குளத்தில் பாய்ந்து தற்கொலை செய்த கதையை மறைத்த ஊடகங்கள்.
கடந்த 24ம் திகதி புன்னாலைக் கட்டுவன் பகுதியில் கொள்ளை ஒன்று இடம்பெற்றது. இக்கொள்ளையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின்பேரின் 4ல் வர் சுண்ணாகம் பொலிஸாரால் மறுநாள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் முக்கியமானர் யாரும் அல்ல , தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும், உதயன் பத்திரிகையின் உரிமையாளருமான சரவணபவானின் நெருங்கிய சகா லோகன். இவரே சரவணபாவனுக்கான புன்னாலைக்கட்டுவான் பிரதேச இணைப்பாளரும்.
லோகன் தலைமையில் இடம்பெற்ற இக்கொள்ளையுடன் சம்பந்தப்பட்டவர்கள் நால்வரில் ஒருவர் புன்னாலைக்கட்டுவான் தெற்கைச் சேர்ந்த 28 வயதுடைய கித்தாகரன் சுமன். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது 5 மில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட தொகையினை இவர்கள் குறித்த இடத்தில் கொள்ளையிட்டுள்ளமை தெரியவந்துடன் பெரும்பாலான பொருட்களும் மீட்கப்பட்டன. அதில் சுவிஸ்நாட்டு நோட்டுக்கள் உட்பட நகைகளும் அடங்கும்.
கொள்ளையிடப்பட்ட பொருட்களில் மேலும் ஒருதொகுதி இரணைமடுக் குளத்திற்கு அருகாமையிலுள்ள இடமொன்றில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கித்தாதரன் சுமன் வழங்கிய தகவலை அடுத்து அப்பொருட்களை மீட்பதற்காக 27.11 அன்று காலை அவரை ஜீப் வண்டியில் ஏற்றிச் செல்லும்போது சுமன் பொலிஸாரைத் தாக்கிவிட்டு வண்டியிலிருந்து குளத்தில் குதித்துள்ளார்.
இவர் தற்கொலை நோக்கில் குதித்தாரா அன்றில் தப்பித்துகொள்வதற்கு குதித்தாரா என்பது தெளிவில்லை. எவ்வாறாயினும் , குறைஉயிருடன் அவரை மீட்ட பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்தனர், ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்பாணத்தில் இடம்பெறுகின்ற சிறு சிறு விடயங்களைக்கூட ஊதிப்பெருப்பிக்கின்ற உதயன் பத்திரிகை இவ்விடயத்தை அப்படியே அமுக்கிவிட்டுள்ளது.
இதில் மிக முக்கியமான விடயம் யாதெனில் , சுமன் இறந்து மறுநாள் கொள்ளையிடப்பட்ட வீட்டிற்கு அருகிலுள்ள வீதியில் பனர் ஒன்று கட்டப்பட்டுள்ளது, அவ் பனரில் 'சுமன் நீ தற்கொலை செய்து கொள்ளவில்லை வீர மரணமடைந்துள்ளாய், தலைவர் இருக்கின்றார் , வந்து யாவற்றுக்கும் பதில் சொல்வார்' என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயத்திலிருந்து வெளிப்படையாக புலனாவது யாதெனில் புலிகள் தொடர்ந்தும் மக்களின் இயல்பு வாழ்வை சீர்கெடுக்க முயற்சித்து வருகின்றனர். ஆதற்கு சரவணபவான் உள்ளிட்ட அரசியல்வாதிகள் உடந்தையாகவுள்ளனர்.
அத்துடன் எஞ்சிய 3 கள்வர்களையும் சரவணபவான் வெளியே எடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
மேலும் இக்கொள்ளை , கைது , தற்கொலை அல்லது கொலை எதுபற்றியோ தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூச்சு விடாததன் காரணம் என்ன?
0 comments :
Post a Comment