வடகொரியாவின் ஏவுகணை வளர்ச்சியால் பீதியடைந்துள்ள ஜப்பான், நேற்று முன்தினம் உளவு பார்க்கும் செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் ஏவியது. சர்வதேச நெருக்கடி இருந்த போதிலும், 2009ல் வடகொரியா, டாபோடாங்-2 என்ற ஏவுகணையை வெற்றிகரமாக விண்ணில் ஏவி பரிசோதித்தது. இந்த ஏவுகணை, 6,700 கி.மீ., தூரம் சென்று தாக்கக் கூடிய திறன் கொண்டது.
மேலும் பல ஏவுகணைகளை வடகொரியா தயாரித்து வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாயின. இதனால், அண்டை நாடான ஜப்பான் பீதியடைந்துள்ளது. ஜப்பானின் தென்பகுதியில் உள்ள டனேகஷிமா விண்வெளி மையத்தில் இருந்து, இலங்கை நேரப்படி நேற்று முன்தினம் காலை, எச்-2ஏ என்ற ராக்கெட் மூலம் உளவு பார்க்கும் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. வடகொரியாவின் ஏவுகணைப் பரிசோதனைகளை உளவு பார்க்கும் அதேநேரம், ஜப்பானின் உள்பகுதியில் இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், இந்த செயற்கைக்கோள் கண்காணித்து தகவல்கள் அளிக்கும்.
No comments:
Post a Comment