தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தைப் பயன்படுத்திய எட்டு வீர வீராங்கனைகளுக்கு தண்டனை
தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட எட்டு வீர வீராங்கனைகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மீண்டும் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து விவகாரத்தில் குற்றவாளியாக காணப்பட்டால் அவர்களுக்கு வாழ்நாள் தடைவிதிக்கப்படலாம் என விளையாட்டுத்துறை வைத்திய நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அர்ஜூன டி சில்வா விளையாட்டுத்துறை மருத்துவ நிறுவனத்தில் நேற்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
சைக்கிளோட்ட வீரர் சுவாரிஸ் பிரேமச்சந்திரவுக்கு ஓராண்டு போட்டித்தடையும், மெய்வல்லுநர் வீராங்களை சம்பிக்கா தில்ருக்சிக்கு மூன்று மாத கால போட்டித்தடையும் விதிக்கபட்டுள்ளது.
கட்டழகர் போட்டியாளரான தர்ஷன பெர்னாண்டோ, உதார மெண்டீஸ், சானக பிரியதர்ஷன மற்றும் லசந்த பொன்சேகா ஆகியோருக்கு ஆறு மாத கால போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கட்டழகர் போட்டியாளர் அனுருத்த குமாரகேவுக்கு ஓராண்டு போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது.பளூ தூக்கல் வீரரான ரன்சிலு ஜயதிலகவுக்கு அதிகபட்சமாக இரண்டாண்டுகள் போட்டித்தடை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment