Sunday, December 18, 2011

திரிசரிய விழாவின் அம்பாரை மாவட்ட நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் நடத்தப்படுகின்ற அந்நிய செலாவெணியை வென்ற நாட்டு வீரர்களுக்கு நடாத்தப்படுகின்ற திரிசரிய விழாவின் அம்பாரை மாவட்டத்திற்கான நிகழ்வுகள் இன்று 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட மரதன் ஓட்டப் போட்டியுடன் ஆரம்பமானது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வெளியுறவு முகாமையாளரும், அம்பாரை மாவட்ட இணைப்பாளருமான ஐ.எல்.எச்.ஜெமீல் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஓட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

தொடர்ந்து மருதமுனை அல் மனார் மத்திய கல்லூhயில் நடைபெற்ற சர்வமத பிரார்த்தனை வைபவத்தில் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், மாகாணசபை உறுப்பினர்களான எம்.எல்.ஏ அமீர், எம்.எல்.துல்கர்நயீம், மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப், சமயத்தலைவர்களான
மௌலவி கே.எல்.எம்.ஹனிபா, சிவசிறி முருகேசனார் நல்லதம்பி, ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர், கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாக்கத் அலி, ஏறாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா, இலங்கை வங்கியின் அம்பாரை மாவட்ட முகாமையாளர் எஸ்.எம்.அப்துல்லாஹ், கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்
என்.எம்.மெண்டிஸ், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிராண் பெரேரா, உட்பட இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சைக்கிள் ஓட்டப்போட்டியினை கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை ஆரம்பித்து வைத்ததுடன் வாகனப் பேரணியைக் கொண்ட ரத யாத்திரையும் ஆரம்பமாகியது.

பி.எம்.எம்.ஏ.காதர்











No comments:

Post a Comment