டிசம்பர் 17ம் தேதி மறைந்த வடகொரியத் தலைவர் கிம் ஜோங் இல்லுக்கு வடகொரியாவில் நேற்று மாபெரும் இறுதி ஊர்வலம் நடந்தது. ராணுவத்தின் நீண்ட அணிவகுப்புடன் மூன்று மணி நேரம் நடந்த இறுதி ஊர்வலம் நாடு முழுவதும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
பியோங்யாங்கில் உள்ள கும்சுவான் நினைவாலய அரண் மனையில் உள்ள சதுக்கத்தில் பனிகொட்டுவதையும் பொருட் படுத்தாது துருப்புகளும் குடிமக்களும் ஆயிரக்கணக்கில் கூடி மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
நாட்டின் சக்திவாய்ந்த தலைவராக விளங்கிய கிம் ஜோங் இல்லின் நல்லுடல் கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டு ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்டது. அதற்கு முன்னதாக ஒரு வாகனத்தில் அவர் புன்னகை பூத்தவாறு காட்சிதரும் புகைப்படம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
கிம் ஜோங்-இல்லின் உடல் கண்ணாடிப் பெட்டகத்தில் வைத்துப் பத்திரப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. மறைந்த முன்னைய தலைவரின் உடலும் அவ்வாறு பாதுகாக்கப்பட்டுள்ளது.
அன்புத் தந்தையின் உடலைத் தாங்கிச்செல்லும் வாகனத்தின் அருகே சோகமே உருவாகக் காணப்பட்டார் அவரது மகன் கிம் ஜோங்-உன்.
No comments:
Post a Comment