மூவருக்கு மரண தண்டனை வழங்கியது தங்காலை நீதிமன்று
மூன்று குற்றாவளிகளுக்கு, தங்காலை நீதிமன்றத்தினால் இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களுக்குள் தங்காலை, மஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
1990 ஆம் ஆண்டு வீரகெட்டிய, விதாரந்தெனிய பகுதியில் இரண்டு இளைஞர்களை படுகொலை செய்த சம்பவத்தின் மூன்று சந்தேக நபர்களுக்கே இன்று மரண தண்டனை விதியாக்கப்பட்டது.
நேற்றைய தினமும் தங்காலை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஒருவரை படுகொலை செய்தமைக்காகவே, அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு. மரண தண்டனை விதியாக்கப்பட்டது.
0 comments :
Post a Comment