கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமானது. நீர்கொழும்பு நகரின் பிரபல தமிழ் பாடசாலையான விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லுரியை சேர்ந்த சாதாரணதர பரீட்சை எழுத வந்த மாணவர்கள் சிலர், இன்று காலை தமது பாடசாலை
முன்பாக ஒன்று கூடி நிற்பதையும் , சிலர் பாடசாலைக்குள் பிரவேசிப்பதையும் , மாணவன் ஒருவன் இறுதி நேரத்தில் தான் எழுதி வைத்துள்ள பாடக் குறிப்பினை வாசிப்பதையும் படங்களில் காணலாம்.
இம்முறை நடைபெறும் பரீட்சையில் பாடசாலைப் பரீட்சார்த்திகளாக 3 இலட்சத்து 85 ஆயிரம் பேரும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக ஒரு இலட்சத்து 46 ஆயிரம் பேரும் தோற்றவுள்ளனர். கடந்த வருடத்தைவிட இவ்வருடம் 22 ஆயிரத்து 911 பரீட்சார்த்திகள் மேலதிகமாகத் தோற்றுகின்றனர்.
இதற்காக நாடு முழுவதும் 3 ஆயிரத்து 920 மத்திய நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்று ஆரம்பமாகின்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் 21ம் திகதி புதன் கிழமை நிறைவடையவுள்ளது.
செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்
No comments:
Post a Comment