Monday, December 19, 2011

வடகொரிய தலைவர் கிம் ஜோங் இல் காலமானதாக வடகொரிய ஊடகங்கள் தெரிவிப்பு

வடகொரியாவின் தலைவர் கிம் ஜோங் இல் இறக்கும் போது 69 வயதாகும். கொரிய யுத்தத்தின் பின்னர் வடகொரிய தலைவராக முடிசூடி கொண்ட கிம் இல் சுங்கின் பின்னர் 1994 ஆம் ஆண்டு கிம் ஜோங் இல் வடகொரியாவின் தலைவராக பதிவியேற்றார்.

2008 ஆம் ஆண்டு இருதய நோயினால் பாதிக்கப்பட்ட கிம் ஜோங் இல மாரடைப்பினால் காலமானாதாக அந்நாட்டின் கே.என்.ஏ செய்தி சேவை தெரிவித்துள்ளது. அத்துடன் அவர் பல வருடங்களாக நீரிழிவு மற்றும் இருதய நோயினால் பாதிக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வடகொரியாவின் தொழிலாளர் கட்சியின் 63 வது ஆண்டு பூர்த்தி விழாவிலும் இவர் அண்மையில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வடகொரியாவின் அனு ஆயூத செயற்பாடுகள் காரணமாக கிம் ஜோங் இல் மேற்கு நாடுகளின் கடும் விமர்சனத்திற்கு ஆளாகினார். வெளிநாட்டு பயணங்களை தவிர்த்து வந்த இவர் அண்மையில் ரயில் மூலம் ரஷ்யாவிற்கு விஜயம் செய்ததுடன் ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெத்வதேவ்வை சந்தித்து இருதரப்பு உறவுகளை கட்டியெழுப்புவது தொடர்பான பேச்சுவார்த்தையிலும் கலந்து கொண்டார்.

இவரது மரணத்தையடுத்து தென்கொரிய இராணுவம் உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் அந்நாட்டு இராணுவ தளபதிகள் விசேட கூட்டத்தையும் கூட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment