பிரான்ஸ்: தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட துப்பறியும் நிபுணர்களின் ஒளிப்படம் வெளியீடு.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இருவரை AQIM என்ற தீவிரவாத இயக்கத்தினர் கடந்த நவம்பர் மாதம் 24ம் திகதி கடத்திச் சென்று விட்டனர். இவர்களது ஒளிப்படத்தை 10.12.2011 இந்த அமைப்பினர் வெளியிட்டனர். இதில் செர்ஜி லாசரெவிக் மற்றும் பிலிப்பி வெர்டோன் என்ற இந்த இரண்டு பிரெஞ்சுக்காரர்களோடு முகமூடியணிந்து ஆயுத மேந்திய தீவிரவாதிகள் மூவர் காட்சியளிக்கின்றனர்.
இவர்கள் இருவரும் பிரான்சின் துப்பறியும் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் ஆவர். பிரான்ஸ் நாடு சாகேல் நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் மீது தொடர்ந்து அடக்குமுறை செலுத்துவதால் ஆட்கடத்தல் நடந்துள்ளது.
பிரெஞ்சுக்காரர்களான லாசரெவிக் மற்றும் வெர்டோனை நைஜர் நாட்டின் எல்லையிலிருக்கும் ஹோம்பேரி நகரின் ஹோட்டலிருந்து துப்பாக்கி முனையில் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment