Tuesday, December 20, 2011

யானையையும் உடைத்து புத்தர் சிலையையும் உடைத்த ஐ.தே.க ஆதரவாளர்கள்.

சிறிகொத்தவில் நேற்று வாக்கெடுப்பு முடிவுற்றபோது வெற்றி தோல்வியை சகிக்க முடியாத நிலையில், அமளி துமளிகள் ஏற்பட்டன. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவி உள்ளிட்ட பல பதவிகளுக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பின் முடிவுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.

சிறிகொத்தவுக்குள் மாத்திரமன்றி, அதனை சூழவும், பதற்ற நிலை ஏற்பட்டது. கட்சியின் தலைமையகத்திற்கு முன்னால் கூடியிருந்த அக்கட்சியின் ஆதரவாளர்கள், ஆத்திரமடைந்த நிலையில் கற்களையும், தடிகளையும் தலைமையகத்தை தாக்கியதுடன், பெரும் கார சார வாக்குவாதங்களும் இடம்பெற்றன.

சிறிகொத்தவை சூழ அமைக்கப்பட்டுள்ள பச்சை நிறத்திலான பாதுகாப்பு வேலியையும், கட்சி ஆதரவாளர்கள் உடைத்து எறிந்தனர். கட்சியின் யானை சின்னத்தையும், சேதப்படுத்தி, அதனையும் அங்கிருந்து அகற்றினர்.

சிறிகொத்தவை சூழ வெள்ளைக்கொடிகள் ஏற்றப்பட்டிருந்தன. கட்சியின தலைமையகத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையும் சேதமடைந்துள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு சில ஆதரவாளர்கள், சிறிகொத்தவுக்குள் நுழைந்து, குழப்பநிலையை தோற்றுவித்தனர். சிறிகொத்தவுக்குள் இருந்த கட்சி உறுப்பினர்கள் தாக்கப்பட்டதாகவும், சிறிகொத்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை போன்று, ஊடகவியலாளர்களும், ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களின் அராஜக செயற்பாடுகள், பெரிதும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர். நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, கலக தடுப்பு பொலிஸாரும், அழைக்கப்பட்டிருந்தன.

No comments:

Post a Comment