சீனாவின் ராணுவ வலிமை குறித்து இந்தியா மிகவும் உஷாராக இருக்கிறது என்று முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளரும் அமெரிக்காவுக்கான இந்திய தூதருமான நிரூபமாராவ் தெரிவித்துள்ளார். அமெரிக்கா,ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ்,ஜெர்மன் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக சீனா ராணுவத்தில் வலிமை பெற்று வருகிறது. இது இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்தியாவுடன் உறவு வைத்துக்கொண்டே கடந்த 1962-ம் ஆண்டு போர் தொடுத்து நாட்டின் 12 லட்சம் சதுரகிலோ மீட்டர் பரபரப்பளவு உள்ள நிலத்தை ஆக்கிமித்து வைத்துள்ளது. இதை கருத்தில் கொண்டும் சீனாவின் ராணுவ வலிமை அதிகரித்து வருவது குறித்தும் இந்தியா உஷாராகவே இருக்கிறது என்று அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா-பெர்கிலி பல்கலைக்கழகத்தில் உரையாற்றும்போது நிரூபமாராவ் தெரிவித்தார்.
அந்த நாட்டுடன் இந்தியா உறவு கொண்டாடி வருகிறது. அதேசமயத்தில் உஷாராகவும் இருக்கிறது என்றார். இந்தியாவின் பெரிய அண்டை நாடாகும் சீனா. அந்த நாட்டுடனான உறவு குறித்து நான் எதுவும் குறைத்துக்கூறவோ அல்லது வேறுபடுத்திக்கூறவோ விரும்பவில்லை என்றார்.
கடந்த இருபது ஆண்டுகளாக இந்தியாவும் சீனாவும் பேச்சுவார்த்தையை அதிகப்படுத்தி வருவதோடு இருதரப்பு உறவும் பலம் அடைந்து வருகிறது. இந்தியாவின் வர்த்தகத்தில் சீனா பெரும் பங்கு வகிக்கிறது. இருநாடுகளின் எல்லைப்பகுதியில் அமைதி நிலவுகிறது.
அதேநேரத்தில் சீனாவின் ராணுவ பலம் அதிகரிப்பு, ராணுவ நவீனமயமாக்குதல் ஆகியவைகளால் இந்தியா உஷாராக இருக்க வேண்டும் என்று நிரூபமா ராவ் மேலும் கூறினார். அவர் ஆற்றிய உரை, வாஷிங்டன்னில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து வெளியிடப்பட்டது.
இப்படியே வாயினால் வல்லரசு என்று சொல்லிக்கொண்டு இருங்கோ....ஒருநாளைக்கு ஆப்புவைக்கும் சீனா!!!
ReplyDelete