சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டிருந்த ஒருதொகை வெள்ளை சந்தன கட்டைகள், கைப்பற்றப்பட்டன. கெப்டன் மோட்டன் கப்பலில் ஏற்றியிருந்த போது, சுங்க பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இவை கைப்பற்றப்பட்டன.
துணிகளை ஏற்றும் போர்வையில், போலியான ஆவணங்களை சமர்ப்பித்து, இவற்றை ஏற்றுமதி செய்வதற்கு, திட்டமிட்டிருந்ததாக, சுங்க பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
விஹாரைகள், அரச காணிகளிலிருந்து இந்த சந்தன கட்டைகள் கடத்தப்பட்டுள்ளதாக, ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது, கைப்பற்றப்பட்ட சந்தன கட்டைகளின் பெறுமதி 3 மில்லியன் ரூபாவாகும்.
சுங்க பணிப்பாளர் நாயகம் சுதர்மா கருணாரட்னவின் பணிப்புரைக்கமைய கீழ், இலங்கை சுங்க பகுதியின் விசேட கண்காணிப்பு பிரிவு, இம்முற்றுகையை மேற்கொண்டது.
No comments:
Post a Comment