Tuesday, December 6, 2011

ஐ.தே.கட்சியின் ஜனநாயகமும் பாரம்பரியமும் தவறான வழியில் செல்லுதாம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் பாரம்பரியமும், ஜனநாயகமும், பிழையான வழியில் செல்வதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்துள்ளார். தேசிய நூலக சேவை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஐக்கிய சோசலிச இளைஞர் முன்னணியின் மேல் மாகாண மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.

திறமையானவர்களின் திறமையை பயன்படுத்தி, ஐக்கிய தேசியக் கட்சியை ஒரு வெற்றிகரமான கட்சியாக மாற்றியமைக்க வேண்டுமென்ற கொள்கை, எமது தலைவர்களிடம் காணப்பட்டது. இன்று நிலைமை, எவ்வாறு இருக்கின்றது. எமது பாரம்பரியங்களிலிருந்து கட்சி தவறிப்போயுள்ளது.

இன்று ஐக்கிய தேசியக் கட்சி உலகில் உள்ள வலதுசாரி கூட்டமைப்புகளுக்கு அடகு வைக்கப்பட்டுள்ளது. இதுவல்ல ஐக்கிய தேசியக் கட்சியின் பாரம்பரியம். ரணில் விக்ரமசிங்கவின் அல்லது சஜித் பிரேமதாசவினதோ அல்லது கரு ஜயசூரியவினதோ ஒரு தனிப்பட்ட பிரச்சினை அல்ல இது. கொள்கை அளவிலான பிரச்சினையே, தற்போது காணப்படுகின்றது. அங்கத்தவர்களை இருளில் வைத்திருக்கின்றார்கள். இதுதானா, ஜனநாயகம்?

No comments:

Post a Comment