Sunday, December 4, 2011

சிவானந்தா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா. (வீடியோ இணைப்பு )

எனது சகோதர மொழியான தமிழை பேச முடியாமைக்கு வெட்க்கி தலை குனிகின்றேன். அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல

கண்டி ஹந்தானை சிவானந்தா தமிழ் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று பாடசாலை மண்டபத்தில் அதிபர் திருமதி மலர் பத்மதாசன் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் விசேட அதிதியாக கலந்து கொண்ட தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கலந்து கொண்டார்.

நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் அங்கு பேசுகையில், கவர்ச்சிகரமான பாடசாலைகளுக்கு தேவையான சலுகைகள் பௌதீக வளங்கள் என பலராலும் கவனத்திற் கொள்ளப்பட்டு கிடைக்கப் பெற்றுவருகின்றன. எனினும் இவ்வாறான சலுகைகள் பின்தங்கிய தோட்டப்புற மக்கள் வாழும் பகுதி மாணவர்களுக்கும் பாடசாலைகளுக்கும் கிடைக்கப் பெறுதல் வேண்டும். இன்று அரசாங்கம் எதிர் கால இளந்தலைமுறையினர்கள் உலக சவால்களுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையிலான கல்வி முறையை தோற்றுவிப்பதற்குகாக ஜனாதிபதியின் செயற்திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன ஊடாக பாரிய முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக என்று தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் , அரசாங்கத்தின் கல்வி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 1000 பாடசாலைகளும். அதனைச் சுற்றி 5000 பாடசாலைகளும் உருவாக்கப்படவுள்ளன. இந்த கல்வி அபிவிருத்தி முன்னெடுப்பானது இலங்கையில் வாழ் சகல பாடசாலை மாணவர்களின் எதிர்கால நலன்கருதி மேற்கொள்ளப்படும் பாரிய அபிவிருத்தி திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ் தோட்டப் புறப் பாடசாலைகளும் உள்வாங்கப்பட்டு எதிர்காலத்தில் கல்வித்துறையில் மேன்மையடைய நல்லாசிகள் உரித்தாகவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மேலும் எனக்குத் தமிழ் மொழியில் ஐந்து வார்த்தைகள் பேச முடியுமாயின் இந்நாட்டு குடி மக்களது பெருமைமிகு தந்தைகளில் ஒருவனாக நான் திகழ்வேன் எனக் கூறிய அமைச்சர் எமது சகோதர மொழியான தமிழ் மொழியைப் பேச முடியாமைக்கு நான் வெட்கப்படுகின்றேன். ஏனெனில் இந்த நாட்டு மக்களில் 95 சதவீதத்தினருக்கு பிரதான மொழிகளான தமிழ், சிங்கள மொழிகளைப் பேச முடியுமாயின் எமது பிரச்சினைகளில் அநேகம் வெறுமனே தீர்ந்து விடும். கடந்த முப்பது வருடங்களாக நாம் இருள் சூழ்ந்த ஒரு காலகட்டத்தில் இருந்தோம்.

தற்போது ஒளிமயமான ஒரு காலகட்டத்தின் ஆரம்பத்தில் இருக்கின்றோம். எனவே நாடு சுபீட்சமடைய வேண்டுமாயின் சகல தரப்பினரும் சமாந்தரமாக முன்னேற வேண்டும். ஒரு தரப்பு மட்டும் பின்னிற்க முடியாது. அப்படியாயின் பெருந்தோட்டப் பகுதி கல்வி அபிவிருத்திக்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து உதவ வேண்டும்.

அவ்வாறாயின் மட்டுமே ஜனாதிபதியின் இலக்கான ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக எமது நாட்டை மாற்ற முடியும். ஜனாதிபதிக்கு ஓர் இலக்கு இருக்குமாயின் அதற்கு இசைவான ஓர் இலக்கு அரசியல்வாதிகளான எம்மிடமும் இருக்க வேண்டும். அந்த அடிப்படையில் எமது பிரதேசமான பெருந்தோட்டப் பகுதி மக்களின் கல்வி வளர்ச்சிக்குப் பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பது எமது நோக்கமாக இருக்க வேண்டும்.

பரிசளிப்பு வைபவங்கள் மூலம் வெற்றி பெற்ற மாணவனுக்கு தனது திறமை மற்றும் தனது இலக்கு பற்றிய தன்னம்பிக்கை ஏற்படுகிறது என்றார்.









No comments:

Post a Comment