Monday, December 19, 2011

பாலியல் தொல்லை தந்த முதலாளியை பழிவாங்க A$45 மில்லியன் கையாடல்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நிதி நிறுவனம் ஒன்றில் கணக்காளராக பணிபுரிந்த ரஜினா சுப்பிரமணியம் (41), தாம் பணிபுரிந்த பத்தாண்டுகளில் அந்த நிறுவனத்தின் $45 மில்லியன் பணத்தை தமது கணக்கில் மாற்றிக் கொண்டு ஆடம்பரமாகச் செலவு செய்துள்ளார். வைரம் மற்றும் விலையுயர்ந்த கற்கள் பதித்த நூற்றுக்கணக் கான நகைகள், புகழ்பெற்ற நிறுவனங்களின் ஆடைகள், அலங்காரப் பொருட்கள், நான்கு தனியார் வீடுகள் என ஆடம்பர மாகச் செலவு செய்துள்ளார்.

தமது நிறுவனத்திலிருந்து தாம் கையாடிய பணத்தை வைத்து ஏழு சொத்துகளை வாங்கியதோடு, நண்பர்களுக்கு கடனும் கொடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் தனி ஒரு பெண் இவ்வளவு பெரிய தொகை கையாடலில் ஈடுபட்டிருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

அவரது வழக்கை கடந்த வியாழக்கிழமை விசாரித்த ஆஸ்திரேலிய மாவட்ட நீதிமன்றம், ரஜினா பேராசையால் கையாடலில் ஈடுபடவில்லை என்றும் கையாடலுக்குக் காரணம், சக ஊழியர் தந்த பாலியல் தொல்லையாலும் ஆக்ககரமான அங்கீகாரத்தை நாடியும் இந்தக் குற்றத்தைப் புரிந்துள்ளதாக கூறியது. இந்த நோக்கங்களின் அடிப்படையில் அவர் மிதமிஞ்சிய செலவினத்தில் ஈடுபட்டதாக ரஜினாவின் சார்பாக சாட்சியம் அளித்த மருத்துவர் கூறினார். ரஜினாவிற்கான தண்டனை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment