அகதி அந்தஸ்த்து கோரிய 95 இலங்கையர்கள் கிறிஸ்மஸ் தீவில் தஞ்சம் புகுந்துள்ளனர்
அகதி அந்தஸ்த்து கோரி மேலும் 95 இலங்கையர்கள் படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவைச் சென்றடைந்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சுமார் 107 பேரை ஏற்றிய படகு 30ம் திகதி புதன்கிழமை கிறிஸ்மஸ் தீவை வந்தடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வந்தவர்களில் 95 பேர் இலங்கையர்களும் இரண்டு இந்தோனேசிய படகோட்டிகள் உள்ளடங்களாக 8 ஈராக்கியர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகதிகள் வருகையால் அவுஸ்திரேலியா பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் கிரிஸ் பொவன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின் அதிகமான இலங்கையர்கள் அகதி அந்தஸ்த்து கோரி அவுஸ்திரேலியாவிற்கு படகுகள் மூலம் வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்த்து கோரி கடந்த மாதம் படகுகள் மூலம் 892 பேர் வந்ததாகவும் இவ்வருட்தில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 3708 பேர் வந்துள்ளதாகவும் அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment