Saturday, December 10, 2011

79வயதில் 75-வது மனைவி!


எழுபத்தொன்பது வயதில் மனைவி கோபித்துக் கொண்டு போனால் ஒரு மனிதர் என்ன செய்வார்? வாழ்க்கையை நொந்து கொள்வார், சன்னியாசம் வாங்கிக் கொள்வார் அல்லது அதிகபட்சம் தற்கொலையாவது செய்து கொள்வார். ஆனால் இது எதையும் செய்யாமல் அடுத்த மனைவியை இன்டர்நெட்டில் தேடிக் கண்டுபிடித்துள்ளார் ஒரு மனிதர் அதிலும் இந்த திருமணம் அவரது 75-வது திருமணம். இந்த அதிசய மனிதரின் பெயர் அலெக்சாண்டர் தைன்.

இங்கிலாந்தின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான அலெக்சாண்டர் தைனுக்கு திருமணம் செய்து கொள்வது ஒரு பொழுதுபோக்கு. 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட தனது டூடர் எஸ்டேட்டில் பார்க்கும் இடங்களில் எல்லாம் மனைவிகள் என்று சொல்லும் அளவுக்கு வரிசையாக திருமணங்களைச் செய்து அசத்தியிருக்கிறார் அலெக்சாண்டர் தைன். தனது மனைவிகள் கூட்டத்துக்கு செல்லமாக ‘வைஃப்லெட்ஸ்’ என்று பெயரும் வைத்திருக்கிறார்.

1969-ல் அன்னா கெயில் என்ற ஹங்கேரி மாடலை மணந்ததன் மூலம் தனது திருமண ஹாபிக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் தைன். இதைத் தொடர்ந்து சீனக் கலைஞர், இலங்கைப் பாடகி, உக்ரைன் ஈவன்ட் மேனேஜர் என்று பலதுறைகளைச் சேர்ந்த பெண்களை மணந்திருக்கிறார். 75-வதாக இவர் மணந்திருப்பது நியூசிலாந்தைச் சேர்ந்த மேரி எனும் 53 வயது பெண்மணியை. இத்தனை மனைவிகள் ஒரே வீட்டில் இருந்தால் சக்களத்தி சண்டை வராமல் இருக்குமா? அடிக்கடி வருகிறது. சமீபத்தில்கூட அவரது 68-வது மனைவி, மற்றொரு மனைவியிடம் கோபித்துக் கொண்டு போய்விட்டார். ஆனால் இதற்கெல்லாம் அசராத தைன் அடுத்தடுத்து மனைவிகளை தேடிக்கொண்டே இருக்கிறார்.

இத்தனை மனைவிகள் பராமரிக்க பணம் வேண்டாமா? அதற்கும் குறைவில்லை தைனுக்கு. 1300 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருக்கிறார். நம் அரசியல்வாதிகளுக்கு தேவையான பல விஷயங்கள் இருப்பதால் பேசாமல் அரசியலில் கலக்கலாம்.

No comments:

Post a Comment