சவூதியில் பெற்ற மகளை 7 வருடமாக சீரழித்தவருக்கு 2,080 கசையடி, 13 ஆண்டுகள் சிறை
சவூதி அரேபியாவில் தனது மகளை 7 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்தவருக்கு 13 ஆண்டுகள் சிறை மற்றும் 2,080 கசையடிகள் கொடுத்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவி்டடுள்ளது. இந்த தகவலை அந்நாட்டு அரசின் அதிகாரப்பூர்வ செய்தித்தாள் வெளியிட்டுள்ளது.
சவூதியைச் சேர்ந்த ஒருவர் கடந்த 7 ஆண்டு காலமாக தான் பெற்ற மகளுக்கு போதைப் பொருள் கொடுத்து அவரை சீரழித்து வந்துள்ளார். இது பற்றி தெரிய வந்த உறவினர் ஒருவர் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அந்த நபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் பெற்ற மகள் என்றும் கூட பாராமல் இளம்பெண்ணை சீரழித்த குற்றத்திற்காக அவருக்கு 13 ஆண்டு சிறை தண்டனையும், தண்டனை காலத்தின் போது 2,080 கசையடி கொடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தனர்.
சவூதி அரசின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளான ஒகாஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. ஆனால் அதில் அந்த நபரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. நீதிபதிகள் சவூதியில் பின்பற்றப்படும் கடுமையான இஸ்லாமியச் சட்டத்தின்படி தீர்ப்பளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment