வலது குறைந்த பெண்னொருவரை கத்தியால் குத்தி கொலை செய்தவருக்கு 5 வருட கடூழியச் சிறை
வலது குறைந்த பெண்ணொருவரை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட நபருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி 5 வருட கால கடூழிய சிறைத் தண்டனையும் 5 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்தார்
வத்தளை , ஹேக்கித்த அல்விஸ்வத்தை பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கே சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது.
.2008 ,பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த திகதியில் ஹேக்கித்த பிரதேசத்தில் வைத்து 46 வயதுடைய பிரமித்தா போலிகே செனவிரத்ன என்ற பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்ததாக பிரதிவாதி மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது .
கொலை செய்யப்பட்டவர் வலது குறைந்த தீருமணமான பெண்ணாவார். பிரதிவாதி தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவியுள்ள நிலையில், இவ்வதந்திகளை பரப்பிய சம்பவம் சம்பவம் தொடர்பாக பிரதிவாதி குறித்த பெண் மீது சந்தேகப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து கோபமடைந்த பிரதிவாதி அப்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
0 comments :
Post a Comment