Saturday, December 17, 2011

ரஷ்யாவுடன் 5 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது இந்தியா

இந்தியா - ர‌ஷ்யா இடையே ராணுவம், சுகாதாரம் உள்பட பல்வேறு துறைகளில் 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியு‌ள்ளன. இர‌ண்டு நா‌ள் பயணமாக ர‌ஷ்யா செ‌ன்று‌ள்ள ‌பிரதம‌ர் ம‌ன்மோ‌‌க‌ன் ‌சி‌ங், ர‌‌ஷ்ய அ‌திப‌ர் மெத்வதேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இருவருடைய பேச்சு வார்த்தைக்குப்பின் இந்தியா - ர‌ஷ்யா இடையே ராணுவம், சுகாதாரம் மற்றும் கல்வி உள்பட பல்வேறு துறைகளில் 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

உலகின் வருங்கால சவால்களை சமாளிக்கும் விதத்தில், இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதேநேரம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது. ரஷ்யா சென்றுள்ள இந்திய பிரதமர் மன்மோகன் சிங், இன்று அந்நாட்டு அதிபர் மெத்வதேவை சந்தித்துப் பேசினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மெத்வதேவ்,ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா தகுதியானது என்றார்.

இந்தியா மற்றும் ரஷ்யா இடையே இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு எதிர்பாராத அளவில் உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment