Tuesday, December 13, 2011

5 வருடங்களுக்கு முன்னர் கொல்லப்பட்டவரின் சிம் கார்டை வைத்திருந்த சிப்பாய் கைது.

மட்டக்களப்பு பிரதேசத்தில் ஐந்து வருடங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டவருடைய தொலை பேசி சிம் காட்டைப் பாவனை செய்த இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். கிளிநொச்சி விஸ்வமடு இராணுவ முகாமில் சேவையாற்றிவந்த நிலையிலேயே குறிப்பிட்ட இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அநுராதபுரத்தில் திவுல்வௌ என்ற இடத்தில் புதிதாக வதியிடத்தைக் கொண்டவர்.

வீட்டில் தனிமையில் இருந்த 45 வயதடைய பாலசுப்பிரமணியம் நிமலன் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜுலை 7 ம் திகதி கொலை செய்யப்பட்டு கிணற்றில் போடப்பட்டிருந்தபோது பிரேதம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதோடு தொலைபேசி நிறுவனத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவலுக்கேற்ப இந்த சிம் காட்டை பாவனை செய்த இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com