அமெரிக்காவில் லாஸ்வேகாசில் இருந்து சன்செட் நகரில் உள்ள ஹுவர் அணைக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது. லேக்மியாட் என்ற இடத்தில் மலைப்பகுதியில் சென்றபோது திடீரென வெடித்து சிதறியது. அதில், விமானி லாஸ்வேகாசை சேர்ந்த நியல்டு (31), டெல்லி தம்பதி டெல்வின் (49), தமரா சாப்மான் (49) உள்பட 5 பேர் பலியாகினர்.
தங்களின் 25-வது ஆண்டு திருமண விழாவை கொண்டாட வந்தபோது விபத்தில் சிக்கி தம்பதிகள் பலியாகி விட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.
No comments:
Post a Comment