இணையத்தளங்கள் 5 தடைசெய்யபடப்டமைக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல்
இலங்கையில் செய்தி இணையத்தளங்கள் ஐந்துக்கு விடுக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக சுதந்திர ஊடக இயக்கம் தாக்கல் செய்துள்ள அடிப்படை மனித உரிமை மீறல் மனு மீதான விசாரணை ஜனவரி 24ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொழும்பு உயர் நீதிமன்றில் குறித்த மனு இன்று (09) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சட்ட மா அதிபர் சுதந்திர ஊடக இயக்கத்திற்கு இவ்வாறு மனு தாக்கல் செய்ய சட்ட அடிப்படை இல்லை என கூறியுள்ளார்.
எனினும் இந்த மனு தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்பட வேண்டும் என கூறிய மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு, மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஜனவரி 24ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
எந்தவொரு ஆலோசனையும் நடத்தாமல் 5 செய்தி இணையத்தளங்களை தடை செய்ய அரசாங்க தகவல் திணைக்களம் எடுத்த முடிவு சட்டவிரோதமானதென அறிவிக்கும்படி கோரி சுதந்திர ஊடக இயக்கம் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment