Sunday, December 4, 2011

தமிழக பொலிஸாரால் கற்பழிக்கப்பட்ட பெண்களுக்கு தலா 5 லட்சமாம்!

திருக்கோவிலூர் அருகே உள்ள ஜி.மண்டபத்தை சேர்ந்த இருளர் சமுதாய பெண்கள் லட்சுமி, ராதிகா, கார்திகா, வைகேஸ்வரி ஆகியோரை திருக்கோவிலூர் போலீசார் கற்பழித்ததாக முறைப்பாடு செய்யப்பட்டது. இக்க ற்பழிப்பில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டனர் எனவும் அவர்கள் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றது.

இதேநேரம் பாதிக்கப்பட்ட 4 பெண்களுக்கும் தலா ரூ.5 லட்சம் முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்ததுடன் அவரது நிவாரண நிதி காசோலை இன்று பாதிக்கப்பட்டவர்களிடம் வழங்கப்பட்டதாக இந்திய ஊடகங்களில் படத்துடன் செய்திகள் வெளியாகியுள்ளது.

அச்செய்தியில் பாதிக்கப்பட்ட 4 பெண்களும் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் அமைச்சர் சி.விசண்முகம் தலா ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கலெக்டர் மணிமேகலை, அரசு கொறடா ப.மோகன், எம்.எல்.ஏ.க்கள் ஜானகிராமன், அழகுவேல்பாபு, விழுப்புரம் நகரசபை தலைவர் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர் எனவும் ரூ.5 லட்சத்தையும் வங்கி கணக்கில் போட்டு உடனடியாக பணமாக பெற்றுக் கொள்ளும் வகையில் காசோலை வழங்கப்பட்டு உள்ளது எனவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் தாழ்த்தப்பட்ட குலப்பெண்கள் தமிழகப் பொலிஸாரினால் மிருகத்த னமாக நடாத்தப்பட்டுள்ளார்கள் என அதிர்ச்சியலைகள் எழும்பியுள்ள நேரத்தில் அவர்களுக்கு ஜெயலலிதாவின் படம் ஒட்டிய கடித உறைகளை வழங்கி ஏமாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com