இரணைமடு உட்பட நாடு பூராகவும் 56 விமான நிலையங்களை அமைக்கத்திட்டம்.
உள்நாட்டு வெளிநாட்டு உல்லாச பயணிகளின் நன்மை கருதி உள்நாட்டில் மேலும் பல விமான நிலையங்களை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்பொருட்டு நாடு முழுவதும் புதிதாக 56 விமான நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதுடன் கண்டியில் மார்ச் மாதம் விமான நிலையமொன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.
மார்ச் மாதம் கண்டியில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக கண்டியில் 4 இடங்கள் அவதானிக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான கள ஆய்வுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவகைள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இறணைமடு மற்றும் நுவரெலியாவிலும் விமான நிலையங்கள் நிர்மாணிக்கும் பணிகள் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும். 750 மில்லியன் ரூபா இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் முதல் 4 மாதங்களில் இலங்கைக்கு 24 ஆயிரம் விமானங்கள் வருகை தந்துள்ளன. இவ்வருடம் முதல் காலாண்டில் இத்தொகை 32 ஆயிரத்து 26 ஆக அதிகரித்துள்ளது................................
0 comments :
Post a Comment