நைஜீரியாவில் ராணுவ தாக்குதலில் 50 முஸ்லிம்கள் பலி !
நைஜீரியாவில் வடக்குப்பகுதியில் “போகோஹராம்” என்ற பழமைவாத முஸ்லிம் பிரிவினர் அதிகளவில் வசிக்கின்றனர். இவர்கள் அந்த மகாணத்தில் இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவத்துக்கும், இவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வரும். இந்நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் சதித்திட்டத்துடன் பழமைவாத முஸ்லிம்கள் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டனர்.
அவர்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது. டாமாடுரா நகரில் நடந்த மோதலில் முஸ்லிம்கள் 50 பேர் கொல்லப்பட்டனர். 4 ராணுவ வீரர்களும் பலியானார்கள். ராணுவத்தின் பதிலடியை தாக்குப்பிடிக்க முடியாமல், கலவரக்காரர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக ராணுவ அதிகாரி அஜுபைக் இஹொஜரிக்கா கூறினார்.
இதேநேரம் நைஜீரியாவில் உள்ள இரண்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் நாளான இன்று அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தது. இதில் 28 பேர் பலியாகியுள்ளனர்.
தலைநகர் அபுஜாவிலுள்ள தெரேசா தேவாலயத்தில் முதல் குண்டு வெடித்தது. இதில் 27 பேர் பலியாகினர். இந்த குண்டு வெடிப்புக்கு தாங்கள் தான் பொறுப்பு என்று இஸ்லாமிய இனமான போகோ ஹராம் கூறியுள்ளது.
இதனைத்தொடர்ந்து அடுத்ததாக மத்திய நகரமான ஜோசில் உள்ள ஒரு தேவாலயத்தில் மற்றொரு குண்டு வெடித்தது. இதில் ஒருவர் பலியாகியுள்ளார்.இந்த குண்டு வெடிப்புகளை தொடர்ந்து தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தினர்.
இஸ்லாமியத்தில் உள்ள போகோ ஹராம் என்ற இனம் ஷரியா சட்டத்தை அந்த பகுதியில் அமல்படுத்துவதற்காக கடந்த வியாழக்கிழமை முதல் தாக்குதல்கள் நடத்தி வருவதாக ஜெனரல் அசுபுவிக் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் போகோ ஹராம் இனத்தவர் அபுஜாவில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தியதில் 20-க்கும் மேற்பட்டவர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.இந்த குண்டு விபத்தின் காரணமாக தேவாலயங்கள் மிகவும் சேதமடைந்துள்ளது.
0 comments :
Post a Comment