இந்தியாவில் இரகசியமான இடங்களில் பயிற்சி பெற்றுள்ள 50 பேர் வரையான புலி உறுப்பினர்கள் இரகசியமான முறைறயில் இலங்கைக்குள் நுழைந்துள்ளதாக புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக லங்கா சி நிவ்ஸ் இணையத்தளம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பூனரி ,வலைப்பாடு , யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு கடல் பகுதி ஊடாக சாம்பூர் பிரதேசம் அருகில் புலி உறுப்பினர்கள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளனர். இன்னும் சிலர் விமானம் மூலமாக நாட்டுக்குள் பிரவேசித்துள்ளனர் .இவர்கள் தற்போது திருகோணமலை ,வவுனியா ,மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் சாதாரண மக்கள் போன்று நிலை பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
புலிப்பயங்கரவாதிகள் தென் இந்தியாவின் பகுதிகள் சிலவற்றில் இரகசியமான முறையில் பயிற்சி பெற்று வருவதாக இதற்கு முன்னர் பல தடைவைகள் பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment