வடமாகாண அபிவிருத்திக்காக 5000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆளுநர்
வடமாகாண அபிவிருத்திக்காக 2012 ஆம் ஆண்டில் 5 ஆயிரம் மில்லியன் ரூபா நிதியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளதாக ஆளுநர் மேஜ ஜெனரல் ஜி.ஏ சந்திரசிறி தெரிவித்துள்ளார். இந்நிதியில் முன்னுரிமை அடிப்படையில் முக்கிய திட்டங்களுக்காக 2 ஆயிரத்த 896 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஆளுநர் இது தொடர்பான ஒப்பந்தம் ஜனவரி 2 ஆம் திகதி கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் கூறினார்.
முதல் கட்டமாக 2 ஆயிரத்து 896 மில்லியன் ரூபா வடமாகாண சபையின் கீழுள்ள 5 அமைச்சுகளுக்கும் அவற்றின் கீழ் இயங்கும் 24 திணைக்களங்களுக்கும் வழங்கப்படும். இது தவிர குறித்த 5 ஆயிரம் மில்லியன் ரூபாவிற்கு புறம்பாக மேலும் பல மில்லியன் ரூபா மாகாணத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வடமாகாணத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன் பெருந்தொகையானோருக்கு தொழில் வாய்ப்புக்களும் நியமனங்களும் வழங்கப்படவுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார். இது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சிடும் நிகழ்வில் வடமாகாண ஆளுநரின் செயலாளர் எல்.இலங்கோவன், மாகாண பிரதம செயலாளர் திருமதி ஆர் விஜேலெட்சுமி, மாகாண அமைச்சின் அதிகாரிகள் திணைக்கள பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment