Tuesday, December 13, 2011

விடைத்தாளில் 5000 ரூபா லஞ்சமாக இணைத்த பரீட்சார்த்தி.

கிழக்கு மாகாண அரச சேவை முகாமைத்துவ உதவியாளர் பதவிக்காக நடத்தப்பட்ட பரீட்சைக்கு சமூகமளித்திருந்த பரீட்சார்த்தி விடைத்தாளில் ரூபா 5000 பண நோட்டினை இணைத்துள்ளதாக மாகாண அரச சேவை ஆணையாளர் சபை தெரிவிக்கின்றது.

இந்த போட்டிப் பரீட்சை கடந்த செப்படம்பர் மாதம் 11 ம் திகதி நடைபெற்றது. அந்த விடைப் பத்திரம் திருத்தும் பணி கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்டுள்ளபோதே இந்த நாணயநோட்டு கண்டு பிடிக்கப்பட்டதாக மாகாண அரச ஆணையாளர் சபையின் செயலாளர் எச். ஈ.. எம். டப்லியூ. திசாநாயக தெரிவித்தார்.

2000 ரூபா நோட்டுக்கள் இரண்டும் மற்றும் ஆயிரம் ரூபா நோட்டு ஒன்றும் உறையில் போட்டு விடைப் பத்திரத்தில் இணைத்திருந்தார். அந்த உறையில் விலாசம் எழுதப்பட்டிருந்தது. தான் மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் தன் வாழ்க்கை கட்டி எழுப்புவதற்கு இந்தப் பரீட்சை குறித்து தன்னுடைய தந்தை எனக் கருதி கவனம் எடுக்குமாறும் கராம்பு சொடியை ஈடுவைத்து வட்டிக்குப் பணம் எடுத்து இதில் இணைத்துள்ளேன் என்று அந்தப் பரீட்சார்த்தி கடிதத்தின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த மோசடியான கொடுப்பனவு காரணமாக அந்த பரீட்சார்த்தியின் பெறுபேறு இல்லாமற் செய்யுமாறு மேலும் திசாநாயக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment