Wednesday, December 7, 2011

கஞ்சா விற்பனை செய்த நபருக்கு 50 ஆயிரம் ரூபா அபராதம்

உல்லாசப் பயணிகளுக்கான ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து கொண்டு தொழிலுக்கு மேலதிகமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட ஹோட்டல் பணியாளர் ஒருவருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சிரான் குணரத்ன நேற்று 50 ஆயிரம் ரூபா அபராதம் விதித்தார்.

வெலஸ்முல்ல, பல்லேகந்த-தெஹிகந்த பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய திருமணமாகாத நபர் ஒருவருக்கே நீதிபதி மேற்படி அபராதத் தொகையை விதித்தார் .

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் பிரதிவாதியை நீர்கொழும்பு உல்லாச பிரயாணிகளுக்கான ஹோட்டல்கள் அமைந்துள்ள இடத்தில் வைத்து 2008 யூன் மாதம் 24 ஆம் திகதி 985 கிராம் கஞ்;சாவுடன் கைது செய்துள்ளனர். பிரதிவாதி கஞ்சாவை கைவசம் வைத்திருந்தமை, விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டார்.

No comments:

Post a Comment