நீர்கொழும்பில் திடீர் சோதனை! 5 ஹோட்டல் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை.
நீர்கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதார பரிசோதகர்கள் நகரில் உள்ள ஹோட்டல்களில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது, சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த ஐந்து ஹோட்டல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்ததாக பிரதான பொது சுகாதார பரிசோதகர் சோமசறி தெரிவித்தார்.
பிரதான பஸ் நிலையம் அருகிலும் நீதிமன்றம் அருகிலும் உள்ள உணவு விற்பனை நிலையங்கள் மற்றும் ஹோட்டல்களில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திடீர் சோதனை நடவடிக்கையின் போது நுகர்வுக்கு பொருத்தமற்ற 50 கிலோகிராம் பூசனி தோசியும் எந்தவித லேபல்களும் ஒட்டப்படாத இனிப்பு உணவுவகைகள் பலவும் கைப்பற்றப்பட்டதாக பிரதான பொது சுகாதார பரிசோதகர் சோமசிறி தெரிவித்தார்.
நகரின் மத்தியில் உள்ள பிரதான ஹோட்டல்களில் கூட உணவு தயாரிக்கப்படும் இடம் மற்றும் மலசல கூடங்கள் சுகாதாரத்துக்கு பொருத்தமற்ற நிலையில் இருப்பதாகவும், இது போன்ற ஐந்து ஹோட்டல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார.
0 comments :
Post a Comment