பெல்ஜியத்தில் மர்ம நபர் சுட்டதில் 5 பேர் பலி! 123 பேர் படுகாயம்!
பெல்ஜியத்தில் உள்ள லீயெஜ் நகரின் மத்திய செயின்ட் லாம்பெர்ட் சதுக்கம் உள்ளது. இங்கு பஸ் நிறுத்தம், மார்க்கெட் மற்றும் முக்கிய கட்டிடங்கள் உள்ளன. எனவே இங்கு எப்போதும் மக்கள் நெருக்கம் அதிகம் இருக்கும், நேற்று அங்கு ஒரு மர்ம நபர் வந்தான். திடீரென அவன் தான் வைத்திருந்த வெடிகுண்டுகளை மக்கள் கூட்டத்தில் வீசினான்.
இதில் அந்த குண்டுகள் வெடித்து சிதறியது. உடனே மக்கள் அங்குமிங்குமாக சிதறி ஓடினார்கள். இருந்தும் அவன் விடவில்லை. தான் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். பின்னர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டான். இதில், 5 பேர்அதே இடத்தில் உயிரிழந்தனர். 123 பேர் படுகாயம் அடைந்தனர்.
அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். எதற்காக இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது? என்ற விவரம் தெரியவில்லை. தொடக்கத்தில் ஒரு கும்பல் துப்பாக்கி சூடு நடத்தியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
விசாரணைக்கு பின் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது ஒருவர் தான் என தெரியவந்தது. பொதுவாக இங்கு போதை மருந்து கடத்தல் கும்பல் இது போன்ற வன்முறை வெறியாட்டங்கள் நடத்துவது வாடிக்கையாக உள்ளது. அது போன்ற சம்பவம் நடந்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment