Sunday, December 18, 2011

லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு 41 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

ஒலிம்பிக் போட்டி லண்டனில் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் நடக்கிறது. இதில் 23 ஆயிரம் போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்துவது என்று முடிவு செய்து இருந்தனர். ஆனால் லண்டன் ஒலிம்பிக போட்டிககு பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகமாக இருக்கும் என்று கணித்து உள்ளனர்.

எனவே இது சம்பந்தமாக மீண்டும் பாதுகாப்பு கமிட்டி கூடி ஆலோசனை நடத்தியது. அதில் பாதுகாப்புககு இன்னும் அதிக போலீசாரை ஈடுபடுத்துவது என்று முடிவு எடுத்துள்ளனர். இதன்படி 41 ஆயிரத்து 700 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளனர்.

இதில்13 ஆயிரத்து 500 பேர் ராணுவ வீரர்கள். இவர்களில் 1000 பேர் அதிரடிப்படை வீரர்கள். படகு போட்டி உள்ளிட்ட நீர் விளையாட்டு போட்டிகள் வேமவுத் கடற்பகுதியில் நடக்கிறது. அப்போது இங்கிலாந்து கடற்படையை சேர்நத 15 ஆயிரம் வீரர்கள் தனியாக பாதுகாப்பு வழங்குவார்கள்.

இப்போதே மைதானங்கள் அனைத்தும் போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே தினமும் மைதானத்தில் சோதனை நடந்து வருகிறது.

No comments:

Post a Comment