Monday, December 12, 2011

மரக்கறி , பழங்கள் பிளாஸ்டிக் பெட்டி விவகாரம் : 40லொறிகள் கைப்பற்றல் – எதிர்த்து ஆர்ப்பாட்டம்

மரக்கறி மற்றும் பழங்களை பிளாஸ்டிக் பெட்டிகளில் ஏற்றிச் செல்ல வேண்டும் என்ற கட்டளையை மீறிய 40 லொறிகளை கைப்பற்றியுள்ளதாக நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.

மரக்கறி மற்றும் பழங்களை பிளாஸ்டிக் பெட்டிகளில் ஏற்றிச் செல்லவேண்டும் என்ற உத்தரவூ நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்தது. களனி பாலம் மற்றும் ஹங்வெல்ல ஆகிய பகுதிகளில் இன்று (12) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது இந்த 40 லொறிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

லொறியுடன் கைது செய்யப்பட்டவர்களை இன்று நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டதாக நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மரக்கறி மற்றும் பழங்களை கொண்டுச் செல்ல பிளாஸ்டிக் கூடைகளை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பு உட்பட நாட்டின் பல பாகங்களில் இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளன.

நுவரெலியா, தம்புள்ள, ஆகிய பொருளாதார மத்திய நிலையம் ஆகியனவற்றில் இந்த ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் தொடர்ச்சியாக இன்று மாலை வரை இடம் பெற்றுள்ளது. ஏ9 வீதியை மறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment