Tuesday, December 6, 2011

ஜப்பான் மிஷன் இம்பொசிபிள் 4

மிஷன் இம்பொசிபிள் என்ற திரைப்பட தொடரின் நான்காவது திரைப்படம் இந்த வாரம் உலக நாடுகளில் திரையிடப்பட இருக்கையில் ஜப்பானில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் திரையிடப்படும். திரைப்பட நிறுவனமான பரமவுண்ட் அமைப்பு தகவல் தருகையில் டோக்கியோவில் மட்டுப்படுத்தப்பட்ட திரைப்படக் காட்சி இடம்பெறுவதை அடுத்து டுபாயில் இது திரையிடப்படும் என்று தெரிவித்துள்ளது.

பூமி அதிர்ச்சி, சுனாமி, அணுசக்தி நிலைய நெருக்கடி என்பனவற்றினால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஜப்பானிய ரசிகர்களின் ஆவலை நிறைவேற்றும் வகையில் ஒஸ்கார் விருதுக்கென பரிந்துரை செய்யப்பட்டுள்ள நடிகர் ரொம் குரூஸ் டோக்கியோ செல்வார் என்று அறிவித்துள்ளது.

இந்தத் திரைப்படம் ஜப்பானில் டிசம்பர் மாதம் 16ஆம் திகதியும், அமெரிக்காவில் 21 ஆம் திகதியும் திரையிடப்பட இருக்கிறது. உலக நாடுகளின் திரையங்குகளிலும்ம் விரைவில் இது திரையிடப்படும்.

No comments:

Post a Comment