Thursday, December 29, 2011

ஜேவிபி தலைவர் உட்பட 22 பேருக்கு நீதிமன்று அழைப்பாணை.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க உட்பட 22 பேருக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி திஸ்ஸமஹாராமவில் நடைபெறவுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவொன்று தொடர்பாக விளக்கமறிக்குமாறு கோரியே, நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.

மக்கள் போராட்ட குழுவை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரான அஜித் குமார மற்றும் ஜி. குலரத்ன ஆகியோரால் இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மாநாடு சட்டவிரோதமானதென முறைப்பாட்டாளர்கள் தமது மனுவில் தெரிவித்துள்ளனர். மத்திய செயற்குழுவில் வாக்குரிமையுள்ள தான் உட்பட சிலருக்கு இம்மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையென முறைப்பாட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த மாநாடு இடம்பெற்றால் கட்சி உறுப்பினர்களுக்கு அநீதி இளைக்கப்படுமெனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதன் பிரகாரம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மக்கள் விடுதலை முன்னணியின தலைவர் உட்பட 22 பேருக்கு அழைப்பாணை பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment