வீடுகளில் 20 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை திருடிய நபர் கைது
20 இலட்சம் ருபா பெறுமதியான நகைகளை வீடுகள் பலவற்றில் திருடிய நபர் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு விஷேட குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி நிசாந்த பொர்னாண்டோ தெரிவித்தார்.
பன்னல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 33 வயதுடைய நபர் ஒருவரே நீர்கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரியின் காரியாலயத்தைச் சேர்த விஷேட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலை அருகில் வைத்து கைது செய்யப்பட்டவராவார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் இராணுவத்திலிருந்து தப்பியோடி வந்தவர் என்றும், இதுவரை பத்து வீடுகளில் 20 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை திருடியுள்ளதாதகவும், 2009 ஆம் ஆண்டிலிருந்து குறித்த நபர் ;திருட்டு செயலில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
சந்தேக நபரினால் திருடப்பட்ட நகைகளின் ஒரு பகுதி பன்னல பிரதேசத்தில் உள்ள நகை கடையொன்றுக்கு விற்பனை செய்யப்பட்டு உருக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன் சந்தேக நபரின் கைவசமிருந்து 46 கிராமும் 330 மில்லி கிராமும் கொண்ட நகைகளும் 12 ஆயிரம் ரூபா பணமும் 10 டொலர்களும்; கைபற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்
0 comments :
Post a Comment