இலங்கையில் ஹோட்டல் மற்றும் விருந்தோம்பலில் நேரடியாகவும், நேரடியற்ற முறையிலும் ஈடுபட்டுள்ளோர்கள் நடாத்தும் பிரதான நிகழ்ச்சியான ஹோட்டல் ஷோ -2012 அடுத்த ஆண்டு ஜூலை மாதம் கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி நிலையத்தில் 13,14,15 ஆம் திகதிகளில் நடை பெறவுள்ளது.
ஏழாவது தடவையாக நடத்தப்படவிருக்கும் இந்த மாபெரும் கண்காட்சி,சுற்றுலா பொழுது போக்கு துறைகளிலுள்ளவர்களினால் பெரிதும் விரும்பப்படுகின்றது.
இத்துறையுடன் தொடர்புடைய சாதனங்கள் மற்றும் பொருள்கள்,வசதிகள்,சேவைகள் என்பன காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.
விரிவான முறையில் ஏற்பாடு செய்யப்படும் இக்கண்காட்சியில் ஹோட்டல் அறைகளின் உள்ளக அமைப்பு,நவீன சலவை நிலையம்,சுகாதார அமைப்பு,எயார் கண்டிசனிங்,கணனி மென்பொருள் அமைப்பு, நவீன பாதுகாப்பு வசதிகள்,உணவு பறிமாறல் வசதிகள்,வெளியடத் தளபாடங்கள்,நீச்சல் தடாகங்கள்,தோட்ட அமைப்பு,கழிவு பொருள் முகாமை,போன்ற பல தரப்பட்ட விடயங்களை அறிந்து கொள்ளலாம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சுமூகமான நிலையினையடுத்து உல்லாசப் பயணிகள் செல்வதற்கு மிகச் சிறந்த 10 இடங்களில் இலங்கையும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
ஆகவே உல்லாசப் பயணிகளுக்கான வசதிகளை தரமுயரத்த வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது.அதே வேளை இலங்கையில் முதலீடுகளுக்கான சிறந்த வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளதால் பல நேரடி முதலீட்டாளர்கள் ஹோட்டல் துறையில் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஹோட்டல் ஷோ வின் ஏற்பாட்டுக் குழு தலைவர்,ட்ரெவின் கோமஸ்,கருத்துரைக்கையில் –தற்போது ஏற்பட்டுள்ள போட்டித் தன்மைக்கு முகம் கொடுக்கும் வகையில்,ஹோட்டல் துறையினை தயார்படுத்துவதற்கு இக்காண்காட்சி பெரிதும் வழிகோலும்,அதே வேளை 2 வருடத்துக்கு ஒரு முறை இவ்வாறான ஹோட்டல் நடத்தப்பட்டுவருகின்றது.
அடுத்த வருடம் முதல் வீதியார உணவு விழா ஒன்றை நடத்துவதற்கு தீர்மாணிக்கப்பட்டுள்ளதாக கூறிய கோமஸ்,விழா இடம் பெறும் காலப்பகுதியில் இலங்கையை சேர்ந்த விருந்தோம்பல்,ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக சர்வதேச புகழ் வாய்ந்த சமையல் கலைஞர்களும் வருகைத் தரவுள்ளதாக ரெவின் கோமஸ் கூறினார்.
இது குறித்த செய்தியாளர் மாநாடு கொழும்பில் இடம் பெற்றது.
செய்தி -ஏ.ஆர்.றஹ்மான்
No comments:
Post a Comment