மாலைதீவு ஜனாதிபதி பிரதம அதிதி
தியத்தலாவை இராணுவ பயிற்சிக் கல்லூரியில் பயிற்சிகளை முடித்து வெளியேறும் இராணுவ அதிகாரிகளின் பிரியாவிடை மற்றும் மரியாதை அணிவகுப்பு நிகழ்வு இன்று (27) தியத்தலாவையில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் அன்னி நkட் கலந்துகொள்ளவுள்ளார். தியத்தலாவை இராணுவ பயிற்சிக் கல்லூரியில் நடைபெறும் பிரியாவிடை,
மரியாதை அணிவகுப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு அரச தலைவர் இவரேயாவார்.
மூன்று நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை நேற்று வந்தடைந்த மாலைதீவு ஜனாதிபதி அங்கிருந்து விசேட ஹெலி மூலம் நேற்றுக் காலை தியத்தலாவை வந்தடைந்தார்.
இவரை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய தலைமையிலான உயரதிகாரிகள் குழு வரவேற்றது.
அதனைத் தொடர்ந்து இராணுவத் தளபதியும் மாலைதீவு ஜனாதிபதியும் விசேட பேச்சுவார்த்தையில் கலந்துக் கொண்டதுடன் தியத்தலாவையில் இடம்பெற்ற பல்வேறு இராணுவ நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துக்கொண்டார்.
தியத்தலாவையில் இன்று நடைபெறும் பிரியாவிடை நிகழ்வில் இராணுவ பயிற்சிகளை முடித்துக்கொண்ட 194 அதிகாரிகள் வெளியேறவுள்ளனர். இவர்களில் மாலைதீவு நாட்டைச் சேர்ந்த பெண் இராணுவ அதிகாரியொருவரும் அடங்குவார்.
தியத்தலாவையிலிருந்து ஸாதிக் ஷிஹான்
No comments:
Post a Comment