Sunday, December 11, 2011

பாண்டிருப்பில் 17 வயது இளைஞன் வெட்டிப்படுகொலை!

கல்முனை பாண்டிருப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள இரும்பு உற்பத்தி நிலையத்தில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் நேற்று அதிகாலை வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். சுந்தரலிங்கம் றஞ்சித் என்ற 17 வயதுடைய இளைஞனே இவ்வாறு கொலைசெய்யப்பட்டவராவார்.

அவரோடு உறங்கிக்கொண்டிருந்த சதாசிவம் என்ற 65 வயதுடைய நபர் ஒருவரும் வெட்டுக்காயங்களுக்கிலக்காகியிருந்த நிலையில் கல்முனை பொலிஸாரினால் மீட்கப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்தி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். இங்கு வருகைதந்த எம்ஐஎம் றிஸ்வி கொலைசெய்யப்பட்ட இளைஞர் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டார்.

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரான் தலைமையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

முதற்கட்ட விசாரணைகளில் இக்கொலையானது காதல் விவகாரம் ஒன்று தொடர்பானது எனவும் குறிப்பிட்ட இளைஞன் யுவதி ஒருவரை காதலித்து வந்ததாகவும் அதற்கு யுவதியின் குடும்பத்தினர் தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இக்கொலை இடம்பெற்றுள்ளதாகவும் வெளிவந்துள்ளது.









பிஎம்எம்ஏ காதர்.

No comments:

Post a Comment